கோவை: கோவை மாவட்டத்தில் முதல் நாளான இன்று 2 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6-ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கியது. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் பெறப்பட்டது.

வேட்பு மனு தாக்கலுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. வேட்பாளர்கள் உடன் 2 வாகனங்கள் மட்டுமே வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. வேட்பாளர்கள் உடன் வந்தவர்கள் 100 மீட்டர் தொலைவில் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும், வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளர் மற்றும் அவருடன் 2 பேர், என மொத்தம் 3 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் வேட்பாளருக்கு உதவி செய்யும் வகையில் அலுவலகங்களில் உதவி மையம் துவங்கப்பட்டு 2 பேர் பணியமர்த்தப்பட்டிருந்தனர். உடல் வெப்பநிலைய தானியங்கி முறையில் கண்டறியும் நவீன கேமரா பொருத்தப்பட்டிருந்தது.
இந்து மக்கள் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
இந்து மக்கள் கட்சி சார்பில் சூலூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இக்கட்சியின் வேட்பாளர் கார்த்திகேயன், சூலூர் தொகுதி தேர்தல் அலுவலகத்தில் அதிகாரி சாந்தியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதே போல், கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி முருகேசனிடம் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த மந்திராச்சலம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.