ராட்சத பலூன் பறக்கவிட்டு தேர்தல் விழிப்புணர்வு: கோவை கலெக்டர் ராசாமணி வித்தியாச முயற்சி!

கோவை: தேர்தலை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌விதமாக கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் கு.ராசாமணி ராட்சத பலூனை பறக்கவிட்டார்.


கோவை: தேர்தலை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌விதமாக கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் கு.ராசாமணி ராட்சத பலூனைப் பறக்கவிட்டார்.



சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 -ஆம்‌ தேதி நடக்கவிருப்பதை முன்னிட்டு, கொரோனா நோய்த்தொற்றை கருத்தில் கொண்டு ஏற்கனவே பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, தேர்தல் காலத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் `முக கவசம் அணிவோம், வாக்களிப்போம்' என்ற வாசகங்கள் பொறித்த ராட்சத பலூனை கோவை மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி பறக்கவிட்டார்.

இதையடுத்து பத்திரிகையாளர்களை‌ச் சந்தித்த அவர் கூறியதாவது:-



கொரோனா நோய்த்தொற்றை கணக்கில் கொண்டு அனைத்துவித பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தைப் பயன்படுத்த ஒரு கைக்கான கையுறை வழங்கப்படும். மேலும் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்படும். முகக் கவசம் அணிந்து வர மக்களை அரசு கேட்டுக்கொள்கிறது. முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு முகக் கவசம் வழங்கப்படும். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்பப்பட்டால் தபால் வாக்குகள் அளிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் வாக்குச் சாவடிகளில் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவும்விதமாக தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு ரூபாய் 50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும் என்ற அறிவிப்பின்படி இதுவரை 43 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்துக்குட்பட்ட பத்து தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 90 பறக்கும் படை அணிகளும் கூடுதலாக 30 சிறப்பு அணிகளும் நியமிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...