கோவை: தேர்தலை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் கு.ராசாமணி ராட்சத பலூனை பறக்கவிட்டார்.
கோவை: தேர்தலை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் கு.ராசாமணி ராட்சத பலூனைப் பறக்கவிட்டார்.

சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 -ஆம் தேதி நடக்கவிருப்பதை முன்னிட்டு, கொரோனா நோய்த்தொற்றை கருத்தில் கொண்டு ஏற்கனவே பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, தேர்தல் காலத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் `முக கவசம் அணிவோம், வாக்களிப்போம்' என்ற வாசகங்கள் பொறித்த ராட்சத பலூனை கோவை மாவட்ட கலெக்டர் கு.ராசாமணி பறக்கவிட்டார்.
இதையடுத்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

கொரோனா நோய்த்தொற்றை கணக்கில் கொண்டு அனைத்துவித பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தைப் பயன்படுத்த ஒரு கைக்கான கையுறை வழங்கப்படும். மேலும் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்படும். முகக் கவசம் அணிந்து வர மக்களை அரசு கேட்டுக்கொள்கிறது. முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு முகக் கவசம் வழங்கப்படும். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்பப்பட்டால் தபால் வாக்குகள் அளிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் வாக்குச் சாவடிகளில் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவும்விதமாக தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு ரூபாய் 50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும் என்ற அறிவிப்பின்படி இதுவரை 43 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்துக்குட்பட்ட பத்து தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 90 பறக்கும் படை அணிகளும் கூடுதலாக 30 சிறப்பு அணிகளும் நியமிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.