கோவை வ.உ.சி. மைதானத்தில் அமைக்கப்பட்ட இலவச வை-பை ஸ்மார்ட் மரம் இடமாற்றம்!

கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த இலவச வை-பை வசதி அளிக்கும் ஸ்மார்ட் மரம் இடமாற்றம் செய்யப்பட்டது.


கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த இலவச வை-பை வசதி அளிக்கும் ஸ்மார்ட் மரம் இடமாற்றம் செய்யப்பட்டது.

கோவை ஸ்மார்ட் சிட்டி ஆக மாற்றப்பட்டு பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. அது ஒருபகுதியாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இலவச வை-பை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் மரம் வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்டது. இந்த மரத்தின் உச்சியில் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்பட்டு அதிலிருந்து தினமும் 500 வாட்ஸ் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வைஃபை வசதி மற்றும் செல்போன், மடிக்கணினி ஆகியவற்றை சார்ஜ் செய்ய பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் கொரோனா காரணமாக மக்கள் கூட்டம் கூடுவதைத் தடுக்க வ.உ.சி மைதானத்துக்குள் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் மரம் உபயோகம் இல்லாமல் இருந்தது. எனவே அந்த மரம் தற்போது வ.உ.சி உயிரியல் பூங்கா அருகே குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கும் கோர்ட்டுக்கு எதிரே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, `வ.உ.சி உயிரியல் பூங்கா அருகே ஸ்மார்ட் மரத்தை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதைச் சுற்றி கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு 30 பேர் உட்காரும் வகையில் ஐந்து பெஞ்சுகள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. இந்த மரத்திலிருந்து 500 மீட்டர் சுற்றளவுக்கு வை-பை வசதி கிடைக்கும்' என்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...