கோவையில் அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை: அ.தி.மு.க.அரசின் தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற பிரச்சாரம், என தீர்மானம்

கோவை: கோவையில் நடைபெற்ற அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையின் செயல் வீரர்கள் கூட்டத்தில் ஆளும் அ.தி.மு.க.அரசின் தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற பிரச்சாரம் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கோவை: கோவையில் நடைபெற்ற அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையின் செயல் வீரர்கள் கூட்டத்தில் ஆளும் அ.தி.மு.க.அரசின் தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற பிரச்சாரம் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல் தொடர்பான செயல்வீரர்கள் கூட்டம் கோவை ராமானுஜர் நகர் அருகில் உள்ள சிலம்பு வணிக வளாகத்தில், இன்று நடைபெற்றது. பேரவைத் தலைவர், மனுநீதிச்சோழன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில, அமைப்பு செயலாளர் சதீஷ் மள்ளர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கொங்கு வம்ச பட்டக்காரர் வி.யூ. கிருஷ்ணன் கலந்து கொண்டார்.

முன்னதாக, தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் நீண்ட கால கோரிக்கையான ஏழு உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து அரசாணை பிறப்பிக்க வழிவகை செய்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில், முக்கிய தீர்மானங்களாக, தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் வரலாற்றுப் பெருமைகளை தொடர்ந்து பொது மேடைகளில் பேசி கௌரவித்து வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்தும், வரும் சட்டமன்ற தேர்தலில் தேவேந்திர குல வேளாளர் அரசாணை அறிவிப்பிற்கு அடித்தளம் அமைத்து நிறைவேற்றிய அதிமுக அரசின் தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை,திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள 21 சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு, அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும், மாவட்டம் ஒன்றியம், கிராமம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள ஊர் பெரியவர்களை சந்தித்து பிரச்சாரத்தை துவங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சிவகுரு மள்ளர், மதன், பத்மநாபன், சுந்தர், மகேஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...