கோவை: ஈஷா யோகா மையத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் யக்ஷா கலைத்திருவிழா இன்று தொடங்கியது.

இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை ரசித்து உணர்வதற்காக கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரிக்கு முந்தைய 3 நாட்கள் யக்ஷா கலைத்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு இன்று (மார்ச் 8-ந்தேதி) முதல் 10-ந்தேதி வரை நடக்கவுள்ளது.

முதல்நாளான இன்று பிரபல இந்துஸ்தானி பாடகி கவுசிகி சக்ரபோர்த்தியின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கீத் ரிசர்ச் அகாடமியின் முன்னாள் மாணவியான இவர் தனது பாடல் திறமையால் பி.பி.சி. விருதைப் பெற்றவர்.

இவரது தந்தை அஜோய் சக்ரபோர்த்தியும் இந்துஸ்தானி பாடகராவார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்விழாவிற்கு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆன்லைன் மூலம் யூ டியூப்பில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.