அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து விட்டது.என்றும் கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் விஜயிடம் தனிப்பட்ட முறையில் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

கோவை: கோவை உடையாம்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுக, அமமுக மற்றும் ஓ.பி.எஸ். அணியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள புகழேந்தி, செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

'ஜனநாயகன்' திரைப்படம் குறித்து பேசிய அவர், "தேர்தலுக்கு முன்பே வெளியாக வேண்டிய படம் அது. அதை தடுத்து வைத்திருந்தனர். தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடுகிறது. படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். பல அமைச்சர்கள் கூட உணர்ச்சிவசப்பட்டனர். பட வெளியீட்டை விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று புஸ்ஸி ஆனந்த் கூறியிருந்தார். எம்.ஜி.ஆரின் 'அடிமைப்பெண்' படம் வெளியானபோது ஊர்வலமாக சென்று பார்த்த நினைவு தற்போது வந்தது. படம் வெளியானதால் தடை செய்தவர்களுக்கு வயிறு எரிந்திருக்கும்," என்றார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் முதலமைச்சர் விஜய் குறித்து இழிவாக பேசுவதாக குற்றம்சாட்டிய அவர், "இதேபோல் தொடர்ந்து பேசினால் சட்டம் தனது கடமையை செய்யும். அவர்கள் சிறைக்குச் செல்லும் நிலை ஏற்படும்," என்றார்.

அதிமுக குறித்து பேசிய புகழேந்தி, "அதிமுக முற்றிலும் சிதைந்து விட்டது. அந்தக் கட்சியில் இருந்து விலகுபவர்களை விஜய் அரவணைத்து வருகிறார். அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள். அக்கட்சியின் 25 எம்.எல்.ஏ.க்கள் தவெகவுக்கு ஆதரவாக உள்ளனர். இதை எடப்பாடி பழனிசாமி ஏற்க தயாராக இல்லை," என்று தெரிவித்தார்.



பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து பேசிய அவர், "பல ஆண்டுகளுக்கு முன்பு அவரது மகன் பிரவீன் தொடர்பான சாலை விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் முறையாக பதிவு செய்யப்படவில்லை. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது," என்றார்.

தொடர்ந்து, "எடப்பாடி பழனிசாமியைச் சுற்றி ஐந்து 'சகுனிகள்' உள்ளனர். கடைசியில் அவருடன் அந்த ஐந்து பேரும், அவரது உதவியாளரும் மட்டுமே இருப்பார்கள். கட்சியை தரைமட்டமாக்கியது அவர்தான். பொள்ளாச்சி ஜெயராமனுக்கு நாவடக்கம் வேண்டும்," என்றும் விமர்சித்தார்.

அருணா ஜெகதீசன் ஆணையத்தின் ஆவணங்கள் இருந்தும் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஜாதி, மத வேறுபாடுகளை ஒழிக்கும் தலைவராக ஜோசப் விஜயை பார்ப்பதாகவும், புஸ்ஸி ஆனந்தின் அன்பும் பாசமும் நேரில் பார்த்த பிறகே புரிந்ததாகவும் அவர் கூறினார்.

'ஜனநாயகன்' திரைப்பட டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்பட்டதாக கூறப்படுவது குறித்து, "அதற்கான ஆதாரங்களை வழங்கினால் நடவடிக்கை எடுக்கச் செய்வோம். டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்பட்டதாக கூறப்படுவது தவறான தகவல்," என்றார்.

தவெகவில் இணைந்துள்ளவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து, "சட்டப்படி அவர்கள் நிரபராதிகள் என்பதை நிரூபிக்க வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்சி நடவடிக்கை எடுக்கும்," என தெரிவித்தார்.

மேலும், "சி.ஜே.பி. விவகாரம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. ராகுல் காந்தி கைது செய்யப்பட்டபோது முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்தார். கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் விஜயிடம் தனிப்பட்ட முறையில் மனு அளிக்க உள்ளேன். எந்த ஊழல் செய்தவரையும் காப்பாற்ற முதலமைச்சர் விஜய் உதவ மாட்டார்," என்று புகழேந்தி தெரிவித்தார்.

Newsletter

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...