கோவையில், காணாமல் போன மாற்றுத்திறனாளி அக்கா, தம்பி தண்ணீர் தொட்டியில் பிணமாக மீட்பு!

கோவை: கோவையில் காணாமல்போன மாற்றுத்திறனாளி அக்கா மற்றும் தம்பி தண்ணீர் தொட்டியில் பிணமாக மீட்கப்பட்டனர்.


கோவை: கோவையில் காணாமல்போன மாற்றுத்திறனாளி அக்கா மற்றும் தம்பி தண்ணீர் தொட்டியில்பிணமாக மீட்கப்பட்டனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கவுண்டம்பாளையம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 25). இவரது அக்கா ப்ரீத்தா (வயது 30). மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளிகளான இவர்கள் இருவரையும் கடந்த 6-ஆம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து அலமேலு என்பவர் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் வீட்டு வளாகத்தில் உள்ள தரைமட்டத் தொட்டியில் அருண்குமார், பிரீத்தா ஆகியோர் பிணமாக மிதப்பது தெரியவந்தது. விசாரணையில் 5 மாதங்களுக்கு முன் தந்தை பரமேஸ்வரன் காலமாகிவிட்ட நிலையில் மனம் வெறுத்துக் காணப்பட்ட அருண்குமார் தனது சகோதரியுடன் தொட்டியில் விழுந்து தற்கொலை செய்தது தெரியவந்தது. பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...