பொள்ளாச்சி பகுதியில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ. 3 லட்சம் பறிமுதல்!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்று வட்டாரப் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 3 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்று வட்டாரப் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 3 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆர்.பொன்னாபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த மிளகாய் வியாபாரி கார்த்திகேயனிடம் சோதனையிட்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ஒன்றரை லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் பொள்ளாச்சியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரிடமிருந்து ஒரு லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

சேர்வைகாரன்பாளையம் அருகே காரில் வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவரிடமிருந்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 60 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.



இதன்படி ஒரே நாளில் 3 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் பிடிபட்டது. இந்த தொகை அனைத்தும் தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்திநாதனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் பணம் கொண்டு வந்த வியாபாரிகளிடம் அதிகாரிகள்தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...