தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய்: தி.மு.க. அறிவிப்பு!

கோவை: தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.



கோவை: தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.



தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் யார் யாருடன் கூட்டணி, தொகுதிப்பங்கீடு மற்றும் வேட்பாளர் நேர்காணல் ஆகியவை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தங்களை சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுத்தால் என்னென்ன திட்டங்களை செயல்படுத்துவோம் என்று கட்சிகள் அறிவித்து வருகின்றன. 



இந்நிலையில் தி.மு.க. சார்பில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தேர்ந்தெடுக்கப்பட்டால் நடைமுறைப்படுத்தவிருக்கும் வாக்குறுதிகள் என்னென்ன என்று நேற்று வெளியிட்டுள்ளார்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதேபோல் ஆண்டுதோறும் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வேலையின்மை பிரச்சினையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இதேபோல் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு கல்வி உதவித்தொகை இரண்டு மடங்கு உயர்த்தி தரப்படும், கிராமங்களிலும் உள்ள அனைத்து வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வசதி செய்து தரப்படும், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் இழிவுநிலை அகற்றப்படும், 35 லட்சம் கோடி ரூபாயை தாண்டுவகையில் தமிழகத்தில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும், எந்த வானிலைக்கும் அசைந்துகொடுக்காத அளவுக்கு நவீன தரமான சாலைகளை அமைக்கப்படும் என்பதுபோன்ற வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

`தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம்' என்னும் தலைப்பில் திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்த அறிவிப்புகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...