நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும்: சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி. கோரிக்கை!

கோவை: ஐந்து மாநிலத்திற்கு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவது பொருத்தமாக இருக்காது, கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் சபாநாயகர் ஓம்.பிர்லாவிடம் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார்.



கோவை: ஐந்து மாநிலத்திற்கு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவது பொருத்தமாக இருக்காது, கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் சபாநாயகர் ஓம்.பிர்லாவிடம் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் நாடாளுமன்ற சபாநாயகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மார்ச் 8-ஆம்தேதி துவங்கி ஏப்ரல் 8-ஆம்தேதி வரை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

நூற்றுக்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் உள்ள இந்த மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் இந்த எம்.பி.க்கள் ஈடுபடுவார்கள்.

இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவது ஏதுவாக இருக்காது. ஆகவே தற்போது கூட்டப்படும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மிக முக்கியமான நிதிமசோதா குறித்த விவாதங்களை மட்டும் நடத்திவிட்டு நாடாளுமன்ற கூட்ட தொடரை ஒத்திவைக்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...