பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தி.மு.க. தங்க மோதிரம்: வாட்ஸ் அப் வதந்தியால் பரபரப்பு!

பொள்ளாச்சி: அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தி.மு.க. தங்க மோதிரம் வழங்கியதாக வாட்ஸ் அப்பில் பரவிய வதந்தியால் பறக்கும் படையினரும், பொதுமக்களும் பரபரப்புக்குள்ளாகினர்.


பொள்ளாச்சி: அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தி.மு.க. தங்க மோதிரம் வழங்கியதாக வாட்ஸ் அப்பில் பரவிய வதந்தியால் பறக்கும் படையினரும், பொதுமக்களும் பரபரப்புக்குள்ளாகினர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தி.மு.க. நெசவாளர் அணி சார்பில் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மார்ச் 1-ந்தேதி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடப்பதாக தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் சென்றது. இதையடுத்து 'அலர்ட்' ஆன பறக்கும் படை குழு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு விரைந்தது. ஆனால் அங்கு சென்று பார்த்தபோது தி.மு.க.வினர் மருத்துவமனை வரவில்லை. அப்படியொரு நிகழ்ச்சியும் நடக்கவில்லை என்பது தெரியவந்தது.

இதற்கிடையே அரசு மருத்துவமனையில் தி.மு.க.வினர் மோதிரம் வழங்கியது போன்ற போட்டோவும் தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கு, 'வாட்ஸ்ஆப்'பில் வந்தது. இதனால் பரபரப்படைந்த தேர்தல் பிரிவு அதிகாரிகள் அந்த போட்டோ குறித்தும், சம்பவம் உண்மையா என்பது குறித்தும் விசாரித்தனர்.

இதையடுத்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனை நிர்வாகத்தை அழைத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விசாரித்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்தியநாதன் கூறுகையில், ''பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கியதுபோன்று, பழைய போட்டோ பகிரப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதுபோன்று தேவையில்லாமல் வீண் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...