முதியோர்கள் தபால் வாக்களிக்க 12டி விண்ணப்ப படிவம் கோவை வந்தது..!

முதியோர்கள் தபால் வாக்களிக்க 12டி விண்ணப்ப படிவம் கோவை வந்தது..!


கோவை: தமிழகத்தில் ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. 

இத்தேர்தலில், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் குறிப்பிட்ட இதர வாக்காளர்கள், எளிதாக வாக்கு அளிக்கும் வகையில் அவர்களின் விருப்பத்தின் பேரில் தங்கள் வாக்குகளை தபால் வாக்குகளாக செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தபால் வாக்கு பெறுவதற்காக படிவம் 12டி

மூத்த வாக்காளர்கள் மட்டுமின்றி மாற்று திறனாளிகள் மற்றும் வாக்குப் பதிவு நடக்கும் சமயத்தில் கொரோனாவால் பாதிப்படைந்துள்ள அல்லது பாதுகாக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் வாக்காளர்கள்,தங்கள் வாக்குகளை தபால் வாக்குகளாக செலுத்த வரும் 16ம் தேதிக்குள்வாக்காளர்கள் தபால் வாக்கு பெறுவதற்காக படிவம் 12டி பூர்த்தி செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது வாக்குச் சாவடி அலுவலரிடம் அளிக்க வேண்டும். இதனிடையே, கோவை மாவட்டத்திற்கு 12 டி விண்ணப்ப படிவங்கள் வந்து சேர்ந்தது.

இதற்காக, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியில் உள்ள அத்தகைய வாக்காளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் இக்குழுக்கள் அமைக்கப்படடுள்ளது. 

இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 

"கோவை மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோர் 64 ஆயிரத்து 500 பேர் உள்ளனர். 20 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களில் தபால் வாக்குகள் அளிக்க தகுதியானோர் கண்டறியப்பட்டு 12 டி விண்ணப்பங்கள் வழங்கப்படும்," என்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...