முதியோர்கள் தபால் வாக்களிக்க 12டி விண்ணப்ப படிவம் கோவை வந்தது..!
கோவை: தமிழகத்தில் ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது.
இத்தேர்தலில், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் குறிப்பிட்ட இதர வாக்காளர்கள், எளிதாக வாக்கு அளிக்கும் வகையில் அவர்களின் விருப்பத்தின் பேரில் தங்கள் வாக்குகளை தபால் வாக்குகளாக செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தபால் வாக்கு பெறுவதற்காக படிவம் 12டி
மூத்த வாக்காளர்கள் மட்டுமின்றி மாற்று திறனாளிகள் மற்றும் வாக்குப் பதிவு நடக்கும் சமயத்தில் கொரோனாவால் பாதிப்படைந்துள்ள அல்லது பாதுகாக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் வாக்காளர்கள்,தங்கள் வாக்குகளை தபால் வாக்குகளாக செலுத்த வரும் 16ம் தேதிக்குள்வாக்காளர்கள் தபால் வாக்கு பெறுவதற்காக படிவம் 12டி பூர்த்தி செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது வாக்குச் சாவடி அலுவலரிடம் அளிக்க வேண்டும். இதனிடையே, கோவை மாவட்டத்திற்கு 12 டி விண்ணப்ப படிவங்கள் வந்து சேர்ந்தது.
இதற்காக, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியில் உள்ள அத்தகைய வாக்காளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் இக்குழுக்கள் அமைக்கப்படடுள்ளது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,
"கோவை மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோர் 64 ஆயிரத்து 500 பேர் உள்ளனர். 20 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களில் தபால் வாக்குகள் அளிக்க தகுதியானோர் கண்டறியப்பட்டு 12 டி விண்ணப்பங்கள் வழங்கப்படும்," என்றனர்.