தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனங்களுக்கு ஜி.பி.எஸ் பொருத்தும் பணி துவக்கம்

கோவை: கோவையில் தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் பயன்படுத்தக்கூடிய அனைத்து வாகனங்களுக்கும் ஜி.பி.எஸ் கருவி பொருத்தும் பணி இன்று துவங்குகிறது.


கோவை: கோவையில் தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் பயன்படுத்தக்கூடிய அனைத்து வாகனங்களுக்கும் ஜி.பி.எஸ் கருவி பொருத்தும் பணி இன்று துவங்குகிறது.

தேர்தல் காலத்தில் விதிமீறல்களை கண்டறிந்து, தடுக்கும் பணியில் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு படையினர், வீடியோ கண்காணிப்புக் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவர். இவர்களது வாகனங்கள் அனைத்திலும், ஜி.பி.எஸ்., எனப்படும் இருப்பிடம் அறியும் கருவி பொருத்துவது வழக்கம்.

அந்த கருவி மூலம், குறிப்பிட்ட வாகனம், எந்த இடத்தில் இருக்கிறது என்பதை கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் அதிகாரிகள் அறிந்து, அதற்கேற்ப உத்தரவுகளை பிறப்பிப்பர். குறிப்பிட்ட ஒரு இடத்தில் அசம்பாவிதம், விதிமீறல் நடப்பதாக புகார் வந்தால், அதற்கு மிக அருகேயுள்ள ரோந்து வாகன குழுவினரை, அங்கு செல்லும்படி உத்தரவு பிறப்பிக்க, ஜி.பி.எஸ்., கருவி பயனுள்ளதாக இருக்கும்.

அதன்படி, கண்காணிப்பு குழுவினரின் ரோந்து வாகனங்கள் அனைத்திலும், ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்தும் பணி, இன்று தொடங்குகிறது. இதேபோல, சட்டசபை தொகுதிகளுக்கான மையங்கள், ஓட்டுச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டு இயந்திரங்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்தப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...