வால்பாறை அருகே குடியிருப்பு பகுதிகளில் புகுந்து சிங்கவால் குரங்குகள் அட்டகாசம்..!

கோவை: வால்பாறை அருகே குடியிருப்புகளில் புகுந்து அட்டகாசம் செய்து வரும் சிங்கவால் குரங்குகளால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


கோவை: வால்பாறை அருகே குடியிருப்புகளில் புகுந்து அட்டகாசம் செய்து வரும் சிங்கவால் குரங்குகளால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள புது தோட்டம் எஸ்டேட் பகுதியில் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பங்களுடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட அரியவகை இனமான சிங்கவால் குரங்குகள் கூட்டம் கூட்டமாக தொழிலாளர்களின் குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன.



குறிப்பாக, தொழிலாளர்களின் வீடுகளின் கூரைகளை பிரித்தெறிந்து உள்ளே புகுந்து, வீட்டிலுள்ள அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள் சமைத்து வைத்திருக்கும் பானையோடு சாப்பாடு ஆகியவற்றை தின்று நாசப்படுத்துவதோடு தூக்கிச் சென்று விடுகின்றன.

மேலும், பானைகளில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் நகை, பணம் போன்ற பொருள்களையும் தூக்கிச் சென்று விடுகின்றன. இதனால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

இந்த நிலையில், சிங்கவால் குரங்குகளால் தொழிலாளர்கள் பாதிப்படைவதை தடுத்திட வனத்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...