கோவை: இன்று மாலை கோவை சத்தியமங்கலம் சாலையில், கோவை சிவா மருத்துவமனையில் இருந்து சரவணம்பட்டி செல்லும் சாலையில் 6 இளைஞர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: இன்று மாலை கோவை சத்தியமங்கலம் சாலையில், கோவை சிவா மருத்துவமனையில் இருந்து சரவணம்பட்டி செல்லும் சாலையில் 6 இளைஞர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களது, விபரீத பயணத்தை நேரில் பார்த்த சிலர், காரில் சென்ற பொதுமக்கள் அதை வீடியோவாக பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து அந்த வீடியோவை மத்திய போக்குவரத்து போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். அந்த வீடியோவில் மோட்டார் சைக்கிளின் எண் தெளிவாக தெரிந்ததால், உடனடியாக போக்குவரத்து துணை ஆணையர் முத்தரசு உத்தரவின்பேரில் போலீசார் அவர்களை சிசிடிவி கேமரா மூலமாக கண்காணித்து அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர்.
சாலை விதிகளை மதிக்காமல் சென்றது, மோட்டார் சைக்கிளில் அளவுக்கு அதிகமான ஆட்கள் பயணித்தது, மதுபோதையில் இருந்தது, என பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.