கோவைக்கு 7,414 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்
கோவை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதனை அடுத்து மாநிலம் முழுவதும் மாவட்டங்களில் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியாக கலெக்டர் ராஜாமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் தேர்தல் வேலைகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும், 4,467 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. சுமார் 21 ஆயிரத்து 500 அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதனிடையே, கோவை மாவட்டத்தில் வாக்களிப்பதற்காக 7 ஆயிரத்து 414 இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,"தேர்தல்களுக்காக பயன்படுத்த வேண்டி 5 ஆயிரத்து 523 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 7 ஆயிரத்து 414 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 5 ஆயிரத்து 912 விவிபேட் இயந்திரங்களும் முதனிலை சரிபார்ப்பு பணி முடிந்து தயார் நிலையில் உள்ளன,’’ என்றனர்.