கோவைக்கு 7,414 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்

கோவைக்கு 7,414 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்


கோவை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதனை அடுத்து மாநிலம் முழுவதும் மாவட்டங்களில் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியாக கலெக்டர் ராஜாமணி நியமிக்கப்பட்டுள்ளார். 

கோவை மாவட்டத்தில் தேர்தல் வேலைகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும், 4,467 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. சுமார் 21 ஆயிரத்து 500 அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதனிடையே, கோவை மாவட்டத்தில் வாக்களிப்பதற்காக 7 ஆயிரத்து 414 இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,"தேர்தல்களுக்காக பயன்படுத்த வேண்டி 5 ஆயிரத்து 523 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 7 ஆயிரத்து 414 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 5 ஆயிரத்து 912 விவிபேட் இயந்திரங்களும் முதனிலை சரிபார்ப்பு பணி முடிந்து தயார் நிலையில் உள்ளன,’’ என்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...