கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேர்தல் விதிமுறை மீறல்: அதிகாரிகள் தகவல்!

கோவை: கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகங்களில் தேர்தல் விதிமுறை மீறல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகங்களில் தேர்தல் விதிமுறை மீறல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவித்த உடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களில் ஆளுங்கட்சியினரின் புகைப்படங்கள் கொண்ட ஸ்டிக்கர்கள் அகற்றப்படாமல் உள்ளதாக அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து கோவை கலெக்டர் அலுவலக அரசு அதிகாரிகள் கூறியதாவது:-

தேர்தல் தேதி அறிவித்தவுடன் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. இருப்பினும் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் பழைய கட்டடம் மற்றும் புதிய கட்டடங்களில் பல்வேறு அரசு துறை அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ள ஆளுங்கட்சியினரின் புகைப்படங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் அகற்றப்படாமல் உள்ளன.

சில அலுவலகங்களில் அலுவலர்கள் தாங்களே தண்ணீரைக் கொண்டு அவற்றை அகற்றி விட்டனர். ஆனால் பெரும்பாலான அரசு துறை அலுவலகங்களில் இந்த ஸ்டிக்கர்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...