தேர்தலின்போது தமிழக, கேரள எல்லையில் மாவோயிஸ்டு அச்சுறுத்தல் தவிர்க்க பாதுகாப்பு குறித்து கலெக்டர்கள் - அதிகாரிகள் ஆலோசனை!

கோவை: தேர்தலின்போது தமிழக, கேரள எல்லையில் மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலைத் தவிர்க்க பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.


கோவை: தேர்தலின்போது தமிழக, கேரள எல்லையில் மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலைத் தவிர்க்க பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. இதில் தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6 -ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் தற்போது மூன்று மாநிலங்களிலும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் கோவைக்கு அருகே கேரளா மாநிலம் உள்ளதாலும், இரு மாநிலங்களிலும் ஒரே நாளில் தேர்தல் நடைபெற உள்ளதால் மாநில எல்லைகளில் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்தான உயர் மட்ட அதிகாரிகளிடையேயான ஆலோசனைக் கூட்டம் கேரள மாநிலம் கோழிப்பாறா பகுதியில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, பாலக்காடு ஆட்சியர் மிருன்மாயி ஜோஷி, காவல் கண்காணிப்பாளர் விஷ்வநாத், திருச்சூர் ஆட்சியர் ஷானவாஸ், காவல் கண்காணிப்பாளர் பூங்குழலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் மாநில எல்லைகளிடையே வனப்பகுதிகள் அமைந்துள்ளதால் மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தல்களை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் தேர்தல் விதிமீறல்களைத் தடுக்க இரு எல்லைகளிலும் வாகனச் சோதனைகளை அதிகப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. வாக்குப்பதிவு நாட்களில் எல்லைகளில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் குறித்தும் பேசப்பட்டது. இந்தக் கூட்டத்தில் இரு மாநில வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...