பொள்ளாச்சி அரசு மருத்துவமனை முன் போக்குவரத்து நெரிசல்: சாலை விரிவாக்கப் பணிகளால் அத்துமீறி வாகனங்கள் நிறுத்தப்படுவதே காரணம் என குற்றச்சாட்டு!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அரசு மருத்துவமனை முன் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு அத்துமீறி வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி அரசு மருத்துவமனை முன் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு அத்துமீறி வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி நகர் பகுதிகளில் பொள்ளாச்சி - கோவை சாலை மற்றும் உடுமலை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையின் முன்புறம் உள்ள சாலை மற்றும் தேர் நிலைய சாலைகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேசிய நெடுஞ்சாலை என்பதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.



அரசு மருத்துவமனை முன் தார்ச்சாலைகள் அமைக்கும் பணி முடிவடைந்த நிலையில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், தனியார் ஆம்புலன்ஸ்கள் அரசு மருத்துவமனை முன்புறம் உள்ள சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளதால் மருத்துவமனையின் உள்ளே செல்லும் ஆம்புலன்ஸ்கள் சரியான நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



மேலும் நெரிசல் காரணமாக பாதசாரிகள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.



மேலும் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதால், அங்கு நிறுத்தப்படும் வாகனங்களை வேறு இடத்தில் நிறுத்த போக்குவரத்து காவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...