கோவை: தேர்தல் பணி என்பது நமது கடமை. இரவு 12 மணி ஆனாலும் அதைச் சிறப்பாக செய்ய வேண்டும் என தேர்தல் பணி குறித்த அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தின்போது அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

சட்டசபை தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. டி.ஆர்.ஓ. ராமதுரை முருகன் முன்னிலை வகித்தார். இதில் கலெக்டர் ராஜாமணி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
'சட்டசபை தேர்தல் பணி என்பதை, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனைவரும் மூளையில் பதிவு செய்து கொள்ளுங்கள். தினமும் வேலைக்கு வருகிறோம். சில வேலைகளை நாளை செய்யலாம் என ஒத்திவைப்போம்.தேர்தல் பணி அப்படியல்ல, நள்ளிரவு 12 மணியானாலும் செய்தாக வேண்டும். செய்ய வேண்டியது கடமை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
சில அதிகாரிகள், தேர்தல் பணியில் அக்கறையின்றி இருக்கிறீர்கள். குறுகிய நாட்களே இருக்கின்றன. தேர்தல் வேலைக்குள் நுழையுங்கள். எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில், பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண், எஸ்.பி. அருளரசு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா மற்றும் தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் பங்கேற்றனர்.