டி.ஜி.பி. ராஜேஷ்தாசை கைது செய்..! கோவை. எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்ட  மாதர் சங்கத்தினர் கைது.

டி.ஜி.பி. ராஜேஷ்தாசை கைது செய்..! கோவை. எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்ட  மாதர் சங்கத்தினர் கைது.


கோவை: பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ்தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரை பணிநீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும் என கோவையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணை செயலாளர் சுதாசுந்தர்ராமன், மாநில தலைவர் வாலன்டினா, மாநில பொது செயலாளர் சுகந்தி,முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி மற்றும் பிரமிலா, என்.அமிர்தம், ராதிகா உள்ளிட்ட மாதர் சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். 



முன்னதாக, கோவை மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்ட மாதர் சங்கத்தினரை காவல் துறையினர் தடுக்க முயன்றனர். ஆனால், போலீஸ் தடையை மீறி ஊர்வலமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த மாதர் சங்கத்தினர், எஸ் பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அலுவலகத்திற்குள் செல்ல முயன்றவர்களை காவல் துறையினர் தடுத்ததால், அங்கு லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



இதனையடுத்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு திரண்ட மாதர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, டிஜிபி ராஜேஸ் தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும்..! கைது செய்யப்பட வேண்டும்..! ராஜேஸ்தாசுக்குஉதவியாக இருந்து பெண் எஸ்.பியை மிரட்டிய செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.

இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்புமறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாதர் சங்கத்தினரை காவல் துறையினர் கைது செய்தனர். மாதர் சங்கத்தின் முற்றுகை போராட்டம், காரணமாக எஸ்பி அலுவலகம் முன்பு பரபரப்பு நிலவியது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...