ஐ.சி.ஏ.ஐ. தென்மண்டல தலைவராக கோவை ஆடிட்டர் கே.ஜலபதி பதவியேற்பு

கோவை: ஐ.சி.ஏ.ஐ. தென்மண்டல தலைவராக கோவை ஆடிட்டர் கே.ஜலபதி பதவியேற்றுக்கொண்டார்,


கோவை: ஐ.சி.ஏ.ஐ. தென்மண்டல தலைவராக கோவை ஆடிட்டர் கே.ஜலபதி பதவியேற்றுக்கொண்டார்,

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரி மற்றும் லச்சத் தீவைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடிட்டர்களையும், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களையும் கொண்டுள்ளது 'ஐ.சி.ஏ.ஐ.’ தென்பிராந்தியம்.

கடந்த ஆண்டுகளில் தென்மண்டலத்துக்கான மாணவர் அமைப்பின் தலைவர், பொருளாளர், செயலாளர், துணைத் தலைவர் என அனைத்து பொறுப்புகளையும் வகித்து சிறப்பாக செயல்பட்டு குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கும், மாற்றத்துக்கும் கோவையைச் சேர்ந்த ஆடிட்டர் கே.ஜலபதி வழிவகுத்தார்.

இவர், மாணவர்களுக்கான தொழில் ஆலோசனைக் குழுவின் தலைவராக இருந்தபோது தமிழக அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி சுமார் ஒரு லட்சத்துக்கும் மேலான மாணவர்களுக்கும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் பயன்பெற உதவினார். கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் 'ஐ.சி.ஏ.ஐ.’ கோவை கிளையிலிருந்து தென்மண்டல தலைவராக தேர்வாகும் ஐந்தாவது ஆடிட்டர் கே.ஜலபதி என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...