தேர்தல் நடத்தை விதிகளின்படி கோவையில் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி தொடங்கியது!

கோவை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதால். சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதால். சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழகம் முழுவதும் அமுல்படுத்தப்பட்டது. தொடர்ந்து கோவையில் சுவர் விளம்பரங்கள் அழிப்பு, தலைவர்கள் சிலை மூடல், சுவரொட்டிகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த தொடர்ந்து மாநகரின் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டிருந்த வால் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன.

மேலும் அவிநாசி ரோடு, ஜெயில் ரோடு, ஓசூர் ரோடு, திருச்சி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுவர்களில் எழுதப்பட்டிருந்த கட்சி சார்ந்த விளம்பரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. மேலும் விடுபட்ட இடங்களில் உள்ள சுவர் விளம்பரங்களை அளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுதவிர மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தலைவர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை துணியைக் கொண்டு மூடி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...