தாஜ்மஹால் செல்ல முன்பதிவு தொடக்கம்: ரயில்வே சுற்றுலாக் கழகம் அறிவிப்பு!

கோவை: தாஜ்மஹால் செல்ல முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக ரயில்வே சுற்றுலா கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தாஜ்மஹால் செல்ல முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக ரயில்வே சுற்றுலா கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் ஐ.ஆர்.சி.டி.சி சார்பில் ரயில் மூலம் ஜெய்ப்பூர், தாஜ்மஹால் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா செல்வதற்காக கோவையில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் கோவா, சண்டிகர், வைஷ்ணவ தேவி கோயில், தாஜ்மஹால் உள்ளிட்ட இடங்களைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 13 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவானது வருகிற 31-ஆம் தேதி மதுரையில் இருந்து தொடங்குகிறது.

இந்த சுற்றுலாவுக்கான கட்டணம் ரூபாய் 13 ஆயிரத்து 540. இதில் ரயில் பயணக் கட்டணம், அசைவ உணவு, தங்கும் வசதி, சுற்றிப்பார்க்க பஸ் வசதி ஆகியவை அடங்கும். முன்னதாக இந்த சுற்றுலா ரயிலில் பயணிக்க கோவையில் முன்பதிவு தொடங்கியுள்ளது. கூடுதல் விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு ஐ.ஆர்.சி.டி.சி. கோவை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...