தேர்தல் நடத்தைவிதி அமலில் இருப்பதால் பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் பணம் எடுத்துச் செல்ல திருப்பூர் கலெக்டர் அறிவுறுத்தல்!

திருப்பூர்: தேர்தல் நடத்தைவிதி அமலில் இருப்பதால் பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் பணம் எடுத்துச் செல்ல திருப்பூர் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.


திருப்பூர்: தேர்தல் நடத்தைவிதி அமலில் இருப்பதால் பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் பணம் எடுத்துச் செல்ல திருப்பூர் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.



தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்தச் சூழலில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலரான விஜயகார்த்திகேயன் தலைமையில் சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கண்காணிப்புக் குழுவினர், பறக்கும் படையினர் ஆகியோர் கலந்து கொண்டனர். அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் எடுத்துரைத்தார்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள சூழலில் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் திருப்பூர் மாவட்டத்தில் முறையாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தங்கள் செலவுகளுக்காக கொண்டு செல்லும் பணங்களுக்கு உரிய ஆவணங்களுடன் செல்ல வேண்டும். அதேநேரத்தில் அவர்களிடம் விசாரணை செய்யும்போது அதிகாரிகள் கனிவாக நடந்துகொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பறிமுதல் செய்யப்படும் பணங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவிடம் உரிய ஆவணங்களைக் காண்பித்து உடனடியாக பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...