வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் தாவரவியல் பூங்கா திறப்பு!

வால்பாறை: வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் தாவரவியல் பூங்கா திறக்கப்பட்டது.


வால்பாறை: வால்பாறை - பொள்ளாச்சி சாலையில் தாவரவியல் பூங்கா திறக்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை ஒரு மலைப்பிரதேசம் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், வால்பாறையில் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் வால்பாறையில் ஊட்டி போன்று ஒரு தாவரவியல் பூங்கா அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு முயற்சியால் வால்பாறை பி.ஏ.பி. அலுவலகம் அருகே பொள்ளாச்சி சாலையில் தாவரவியல் பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.



இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க உள்ளாட்சித்துறை மற்றும் சிறப்பு அமலாக்கத் திட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவுக்கிணங்க நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவுன்ராஜ் ரிப்பனை வெட்டி தாவரவியல் பூங்காவை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வால்பாறை நகராட்சி ஆணையாளர் டாக்டர் பவுன்ராஜ், மேலாளர் நஞ்சுண்டன், வால்பாறை கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குனர் வால்பாறை வீ.அமீது, கூட்டுறவு வங்கி துணை இயக்குனர் மயில் கணேசன் மற்றும் ஏராளமான பொதுமக்கள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...