கோவை: கோவையில் விடுதி வாடகை கேட்ட உரிமையாளரை தாயும், மகனும் சேர்ந்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் சந்திராசாமி. இவர் பூ மார்க்கெட் பகுதியில் தங்கும் விடுதி வைத்து நடத்தி வருகிறார். இவரது விடுதியில் பூ மார்க்கெட்டைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரது மனைவி விஜயா (வயது 48), இவர்களது மகன் தங்கராஜ். இவர்கள் கடந்த ஒரு வருடமாக இந்த விடுதியில் வசித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக இவர்கள் வாடகை கொடுக்காமல் இருந்தனர். இதனால் அவர்களை விடுதியை காலி செய்து விட்டு செல்லுமாறு சந்திராசாமி கூறினார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தாயும், மகனும் சேர்ந்துகொண்டு விடுதி உரிமையாளர் சந்திரசாமியை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் அடித்து உதைத்தனர்.
இதுகுறித்து சந்திராசாமி ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுதி உரிமையாளரைத் தாக்கிய விஜயா அவரது மகன் தங்கராஜ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.