நீலகிரி: உதகை மத்திய பேருந்து நிலையத்தில் வழித்தட சீட்டில் பேருந்தை இயக்க மறுப்பதாக அதிகாரிகள் தன்னிச்சையாக குறிப்புகள் எழுதுவதை கண்டித்து திடீரென பணிமனை முன்பு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் உள்ள 150க்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளது. இதில் 95 சதவீத பேருந்துகள் இயக்கப்படாமல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், வழித்தட சீட்டில் (tripe seat) பேருந்துவை இயக்க ஊழியர்கள் மறுப்பதாக, போக்குவரத்து அதிகாரிகள் தன்னிச்சையாக எழுதி வருவதற்கு கண்டனம் தெரிவித்து உதகை பணிமனை முன்பு திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், காவல் துறையினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சிறிது நேரத்தில் கலைந்து சென்றனர்.