பொள்ளாச்சியில் 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் - பொதுமக்கள் அவதி!

கோவை: பொள்ளாச்சியில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் அவதியடைந்தனர்.


கோவை: பொள்ளாச்சியில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் அவதியடைந்தனர்.

தமிழகம் முழுவதும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி பகுதியை பொருத்தவரை மூன்று போக்குவரத்து பணிமனைகளில் 180 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த போராட்டம் காரணமாக குறைந்த எண்ணிக்கையில் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.



இந்த நிலையில், இன்று காலை முதலே பல்வேறு பணிகளுக்காக உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள், தொழிலாளர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் நீண்ட நேரமாக காத்துக் கிடக்கின்றனர்.



மேலும், தனியார் பேருந்துகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அவர்கள் முந்தியடித்துக்கொண்டு பேருந்துகளில் ஏறி வருவதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

எனவே, தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...