கோவை: செல்போன் டவர் மீது ஏறி பெண் தற்கொலை மிரட்டலில் ஈடுபட்டதால் கோவை பூ மார்க்கெட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் விஜயா. இவர் தனது இரண்டு மகள்களுடன் கோவை பூ மார்க்கெட் பகுதி வணிக வளாகத்தில் குடியிருந்து வருகிறார். இதற்காக 30 ஆயிரம் ரூபாய் முன்தொகை கொடுத்ததுடன் மாதம் 7 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் காம்ப்ளக்சில் உள்ள மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளை கட்டட உரிமையாளர் துண்டித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கே குடியிருக்க முடியாமல் விஜயா குடும்பத்துடன் சிரமப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று மாலை விஜயா அப்பகுதியில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினார். மேலும் கட்டிட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை செல்போன் டவரில் இருந்து இறங்க மாட்டேன் என்று கூறினார்.
இதுபற்றி கேள்விப்பட்டதும் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் விரைந்தனர். மேலும் செல்போன் டவர் மீது நின்ற விஜயாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சமாதானம் பேசி தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் அவரை பாதுகாப்புடன் கீழே இறக்கினர்.