அமைச்சர் குறித்த அவதூறு வழக்கில் கார்த்திக் எம்.எல்.ஏ.வுக்கு கையெழுத்து நிபந்தனை தளர்வு: கோவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதி உத்தரவு!

கோவை: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக சிங்காநல்லூர் தொகுதி கார்த்திக் எம்.எல்.ஏ மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். முன்ஜாமீன் பெற்ற அவர் குனியமுத்தூர் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி இனி கையெழுத்திட வேண்டாம் என நிபந்தனையை தளர்த்தி உத்தரவு பிறப்பித்தார்.


கோவை: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக சிங்காநல்லூர் தொகுதி கார்த்திக் எம்.எல்.ஏ மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். முன்ஜாமீன் பெற்ற அவர் குனியமுத்தூர் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி இனி கையெழுத்திட வேண்டாம் என நிபந்தனையை தளர்த்தி உத்தரவு பிறப்பித்தார்.

கோவை குனியமுத்துாரை சேர்ந்த 'ஆலயம் பவுண்டேஷன்' கட்டுமான நிறுவன இயக்குனர் ரங்கராஜ் மற்றும் அமைச்சர் வேலுமணி குறித்து, சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியதாக சிங்காநல்லுார் தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திக் மீது புகார் அளிக்கப்பட்டது. குனியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து மனுவை விசாரித்து வந்த நிலையில், முன் ஜாமீன் கோரி கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் கார்த்திக் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து கீழ்கோர்ட்டில் சரணடைந்து ஜாமீன் பெற்றுக்கொள்ள நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து ஜே.எம்-7 கோர்ட்டில் கடந்த 5-ம் தேதி சரணடைந்த கார்த்திக் எம்.எல்.ஏ.வுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை தினசரி காலை குனியமுத்தூர் காவல்நிலையத்தில் கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது. அதன்படி, கையெழுத்திட்டு வந்த அவர் நிபந்தனையை தளர்த்தக் கோரி மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திக்கிற்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...