கோவையில் வீட்டு வாசலில் மறைத்து வைத்த சாவியை எடுத்து வீட்டைத் திறந்த திருடன் அங்கிருந்த ரூ.1 லட்சம் பணம் மற்றும் 12 பவுன் நகையை திருடிச் சென்றான்.

கோவை. மணியகாரம்பாளையம், பூசாரிபாளையம், திருவள்ளுவர் வீதி பகுதியில் வசிப்பவர் பன்னீர் செல்வம் மகன் வேலப்ப உடையார். இவர் தனது மனைவியுடன் குலதெய்வம் கோயிலுக்குச் செல்வதற்காக இன்று காலை 10 மணி அளவில் வீட்டை பூட்டி விட்டு சாவியை ஜன்னலில் மறைத்து வைத்து குடும்பத்துடன் புறப்பட்டார்.
பொன்னே கவுண்டன் புதூர் பகுதியில் உள்ள குலதெய்வம் கோயிலுக்குச் சென்று விட்டு பிறகு மாலை 4 மணி அளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது சாவி கதவில் இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ஜன்னலில் மறைத்து வைத்திருந்த சாவியை திருடன் எடுத்து கதவைத் திறந்து வீட்டுக்குள் சென்று பீரோவைத் திறந்து 12 பவுன் நகை 1 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றிருக்கிறான். மேலும் வீட்டில் சிறிது நேரம் டி.வி. போட்டு பார்த்துவிட்டு சென்றது தெரியவந்தது.
நகை மற்றும் பணம் திருட்டு போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வேலப்ப உடையார் கோவை சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சரவணம்பட்டி போலீசார்விரைந்து வந்து கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் சகிதமாக விசாரணை செய்து வருகின்றனர்.