கேரள பள்ளி மாணவி கொலை: குற்றவாளியை போலீஸ் கோவையில் தேடுகிறது!

கோவை: கேரளாவில் பள்ளி சென்று வீடு திரும்பிய மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். குற்றவாளி கோவையில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் தேடிவருகின்றனர்.


கோவை: கேரளாவில் பள்ளி சென்று வீடு திரும்பிய மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். குற்றவாளி கோவையில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் தேடிவருகின்றனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ். இவருக்கு 17 வயதில் ரேஷ்மா என்ற மகள் இருந்தார். ரேஷ்மா இடுக்கி சண் வாலி மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் பள்ளிக்குச் சென்ற ரேஷ்மா நீண்டநேரமாகியும் வீடுதிரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர் இடுக்கி வெள்ளதூவல் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதற்கிடையே ரேஷ்மாவின் உறவினர்கள் காவல்துறையினருடன் சேர்ந்து ரேஷ்மாவை தீவிரமாக தேடினர். அப்போது ரேஷ்மா வீட்டின் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் நெஞ்சுப்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். மகள் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சியில் மூழ்கினர்.

ரேஷ்மா இறந்து கிடந்த இடத்தில் சோதனையிட்டபோது அங்கு ஒரு மொபைல் போன் கிடைத்தது. அது யாருடையது என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது அது ரேஷ்மாவின் உறவினர் அனு என்பவருடையது என்று தெரியவந்தது. இதையடுத்து ரேஷ்மா நடந்து சென்ற சாலையில் இருந்த சி.சி.டி.வி. போலீசார் ஆய்வு செய்தபோது, ரேஷ்மாவுடன் அனு நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

இதன்பேரில் போலீசார் அனுவைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர் தற்போது வரை எங்குள்ளார் என்ற தகவல் கிடைக்கவில்லை. ஆகையால் தப்பிச் சென்ற அனு தமிழகத்துக்குச் சென்றிருக்கலாம் என போலீசார் கூறினர். இதையடுத்து கோவை காவல்துறை துணையுடன் கேரள போலீசார் கோவையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...