அ.தி.மு.க. ஆட்சியில் ஆபத்தில்லை; தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது: துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சொல்கிறார்!

பொள்ளாச்சி: அ.தி.மு.க. ஆட்சியில் எந்த ஆபத்தும் இல்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.



பொள்ளாச்சி: அ.தி.மு.க. ஆட்சியில் எந்த ஆபத்தும் இல்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவையொட்டி பொள்ளாச்சியில் அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் 36 வார்டுகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

தி.மு.க.விடம் இருந்துதான் தமிழக பெண்களை பாதுகாக்க வேண்டுமே தவிர, தமிழக மக்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் எந்த ஆபத்தும் இல்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. அ.தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு நல்ல அபிமானம் உள்ளது. கடந்ததி.மு.க. ஆட்சியில் நில அபகரிப்பு மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்த கட்சி தி.மு.க. என்ற அதிருப்தி மக்களிடையே உள்ளது.

தி.மு.க. என்றாலே மக்கள் பயந்து ஓடுகிறார்கள். குறிப்பாக சிறு மற்றும் பெரும் தொழிலதிபர்கள் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் எல்லாவற்றையும் அபகரித்து விடுவார்கள் என்று அச்சப்படுகிறார்கள் . ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 4 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி நல்லாட்சி வழங்கி வருகிறார். மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் மு.க.ஸ்டாலின் குற்ற ஆராய்ச்சி நிபுணராகஎப்போதும் அரசு மீது குற்றச்சாட்டுக்களை சொல்லி வருவதால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.



முதல்வர் செயல்படுத்தும் நல்ல திட்டங்களை எல்லாம் அவர் சொல்லித்தான் செய்கிறார் என்று முந்திரிக்கொட்டை போன்று சொல்வதைப் பார்த்து அவருக்கு மனநோய் ஏற்பட்டு விட்டதோ என்று மக்கள் நினைக்கிறார்கள். இதனால் அவர் மீது மக்கள் நெருப்பாகி விட்டார்கள். இவர் சொல்லி நிறைவேற்ற வேண்டிய நிலையில் முதல்வர் இல்லை.

எடப்பாடி பழனிசாமி யாருடையபதவியையும் பறித்துக் கொண்டு வரவில்லை. ஆனால் மு.க.ஸ்டாலின் கருணாநிதி மகன் என்ற தகுதியில்தான் தமிழகத்தில் அரசியல் செய்கிறார். 2021 தேர்தலுக்குப் பிறகு தொண்டர்கள் உழைப்பால் சேர்த்த சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய ஒன்றுதான் அவருடைய வேலையாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...