வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்: கலெக்டர் ராசாமணி அதிரடி!

கோவை: கரியாம்பாளையம் ஊராட்சி செயலாளர் கடந்த 6 வருடங்களில் 89 லட்சம் சொத்து சேர்த்தது கண்டறியப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவரை மாவட்ட கலெக்டர் ராஜாமணி சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்தார்.


கோவை: கரியாம்பாளையம் ஊராட்சி செயலாளர் கடந்த 6 வருடங்களில் 89 லட்சம் சொத்து சேர்த்தது கண்டறியப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவரை மாவட்ட கலெக்டர் ராஜாமணி சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்தார்.

அன்னுார் ஊராட்சி ஒன்றியம் குன்னத்துார் ஊராட்சி செயலாளராக 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தவர் கார்த்திகேயன் (வயது 40). இவர், தற்போது கரியாம்பாளையம் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதிகளவு சொத்து சேர்த்ததாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

கோவை கலெக்டர் ராஜாமணி பிறப்பித்துள்ள உத்தரவில், 'கார்த்திகேயன், 2013 ஏப்ரல் முதல் 2019 டிசம்பர் வரை வருமானத்துக்கு பொருந்தாத வகையில், 89 லட்ச ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. எனவே, சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்' என தெரிவித்துள்ளார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...