கோவை: மின்வாரிய அமலாக்கத்துறையின் கோவை கோட்ட அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தபோது மின்சாரத்தைத் திருடி பயன்படுத்திய நபர்களை கண்டுபிடித்ததுடன் அவர்களுக்கு ரூ.2.78 லட்சம் அபராதம் விதித்தனர்.
கோவை: மின்வாரிய அமலாக்கத்துறையின் கோவை கோட்ட அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தபோது மின்சாரத்தைத் திருடி பயன்படுத்திய நபர்களை கண்டுபிடித்ததுடன் அவர்களுக்கு ரூ.2.78 லட்சம் அபராதம் விதித்தனர்.
மின்வாரிய அமலாக்கத்துறையின் கோவை கோட்ட அதிகாரிகள் கோவை வடக்கு வட்டத்துக்குட்பட்ட பெரியநாயக்கன்பாளையம், சின்னவேடம்பட்டி, கீரணத்தம், கோவில்பாளையம், சரவணம்பட்டி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, மூன்று இடங்களில் மின் திருட்டு கண்டறியப்பட்டது. திருட்டில் ஈடுபட்ட நபர்களுக்கு ரூ.2.78 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க வலியுறுத்தி சமரசத் தொகையாக ரூ.52 ஆயிரம் செலுத்தினர்.
இதையடுத்து அவர்கள் மீது, போலீசாரிடம் புகார் எதுவும் தரப்படவில்லை. இந்நிலையில், மின் திருட்டு குறித்த புகார்களை 94430 49456 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என கோவை மின்பகிர்மான வட்ட (வடக்கு) மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) கீதா தெரிவித்துள்ளார்.
eob>
source: SimpliCity News Team