கோரிக்கை நிறைவேறும்வரை பணிகளில் ஈடுபடமாட்டோம்: வருவாய்த்துறை அலுவலர்கள் அறிவிப்பு!

கோவை: கோரிக்கைகள் நிறைவேறும்வரை பணிகளில் ஈடுபடமாட்டோம் என்று வருவாய்த்துறை அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.



கோவை: கோரிக்கைகள் நிறைவேறும்வரை பணிகளில் ஈடுபடமாட்டோம் என்று வருவாய்த்துறை அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.



தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைசேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது அவர்கள், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை வழங்கக் கோரியும், அனைத்து வருவாய்த்துறை ஊழியர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கக் கோரியும், மாவட்டங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர் பணியிடங்களை நிரப்பக் கோரி தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.



மேலும் மாநிலம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வருவாய்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், தமிழக அரசு தங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்று தெரிவித்தனர்.

வரும் சட்டமன்றத் தேர்தலின்போது தேர்தல் பணிகளை தாங்கள் புறக்கணிப்பதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை வருவாய் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடப்போவதில்லை என்றும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் த.சண்முகராஜ் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...