வால்பாறையில், சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகரிக்க படகு இல்லம்: விரைவில் திறப்பு!

வால்பாறை: சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க வால்பாறையில் படகு இல்லம் அமைக்கப்படுகிறது. விரைவில் திறப்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


வால்பாறை: சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க வால்பாறையில் படகு இல்லம் அமைக்கப்படுகிறது. விரைவில் திறப்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுலாப் பிரதேசமாக உள்ளது. இங்கு தமிழ்நாடு மட்டுமன்றி அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா மற்றும் பாண்டிச்சேரியிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

வால்பாறையின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் வால்பாறையில் படகு இல்லம் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர்.



அதனை ஏற்று வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு முயற்சியில் வால்பாறை ஸ்டான்மோர் சாலையில் நகராட்சி சார்பில் படகு இல்லம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கரைகளை அழகுபடுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. ஈச்ச மரங்களும் நடப்பட்டுள்ளன.



பெரும்பாலான பணிகள் முடிவுற்ற நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த மாத இறுதிக்குள் படகு இல்லம் திறக்க இருப்பதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தகவல் பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...