கோவை: கோவையில் நேற்று ஒரே நாளில் திருமணமான குடும்பப் பெண்கள், தனியார் நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய பெண்கள், கல்லூரி மாணவி உள்பட ஆறு பெண்கள் மாயமானார்கள். இந்தச் சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையைச் சேர்ந்த வடிவேல் மனைவி கிரிஜா (வயது 28). இவர்களுக்கு வர்ஷினி என்ற மகள் உள்ளார். நேற்று கணவருடன் கோபித்துக்கொண்டு கிரிஜா மாயமானார். இதைக் கண்டு வடிவேல் அதிர்ச்சி அடைந்தார். அன்னூரைச் சேர்ந்த பெத்தையான் மகள் மைதிலி (வயது 19). துணிக்கடையில் வேலை பார்க்கும் இவர் வேலை முடிந்ததும் நேற்று மாலை வீடு திரும்பவில்லை.
சேலம் ஆத்தூரைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி கவுசல்யா (வயது 19). அவர் சூலூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து கௌசல்யாவை போலீசார் தேடி வருகின்றனர். சூலூர் கலங்கல் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் துர்காதேவி (வயது 16). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். திடீரென மாயமான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆனைமலையைச் சேர்ந்த முத்துசாமி மகள் கவுசல்யா (வயது 23). வீட்டிலிருந்து வெளியே சென்ற இவர் மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் தேடி வருகின்றனர். சிறுமுகையைச் சேர்ந்த நல்லசிவம் மகள் கௌதமி (வயது 21). தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வரும் இவர் போட்டோ ஸ்டுடியோவுக்கு சென்று வருவதாகக் கூறினார். அதன்பிறகு அவரைக் காணவில்லை.இது குறித்து அந்தந்த காவல் நிலையங்களில் அவர்களது பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
காணாமல் போன 6 பெண்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஒரே நாளில் 6 பெண்கள் மாயமான சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.