கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மு.க.ஸ்டாலின் சூறாவளிப் பிரச்சாரம்: நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது!

கோவை: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நாளை தொடங்கி 3 நாட்கள் மு.க.ஸ்டாலின் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.


கோவை: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நாளை தொடங்கி 3 நாட்கள் மு.க.ஸ்டாலின் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று வருகிறார். இதுவரை மூன்று கட்ட பிரச்சாரத்தை முடித்துள்ள ஸ்டாலின் நேற்று மதுரை ஒத்தக்கடை பகுதியில் இருந்து நான்காவது கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். அதன்படி நாளை கோவை சிங்காநல்லூரில் `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

மாநகர் கிழக்கு மற்றும் மாநகர் மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், வணிகர்கள், விவசாயிகள், சிறு குறு தொழில் முனைவோர், இளைஞர்கள், மகளிர் என பலர் கலந்து கொள்கின்றனர். அவரிடமிருந்து மு.க.ஸ்டாலின் நேரில் மனுக்களை பெற்றுக்கொள்கிறார். பின்னர் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார்.

இதைத்தொடர்ந்து மதியம் ஒரு மணி அளவில் நீலகிரி மாவட்ட தி.மு.க. மற்றும் கோவை புறநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மேட்டுப்பாளையம் காரமடையில் நடக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெறுகிறார். முதல் நாள் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ளும் ஸ்டாலின் அன்றிரவு ஓட்டலில் தங்கி ஓய்வு எடுக்கிறார்.

இரண்டாவது நாளான 20-ஆம் தேதி கோவை கிழக்கு மற்றும் கோவை தெற்கு மாவட்டம் சார்பில் பொள்ளாச்சி ஆட்சி பெட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கிறார். இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்களிடையே மனுக்களை பெறுகிறார். தொடர்ந்து மதியம் 1 மணி அளவில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தாராபுரம் பஸ் நிலையம் எதிரே நடக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகிறார்.

3-வது நாளான 21-ஆம் தேதி காலை 8 மணிக்கு திருப்பூர் காங்கேயம் ரோடு ராக்கிபாளையம் பிரிவில் நடக்கும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் மனுக்களைப் பெறுகிறார். மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கோவை திருப்பூர் மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...