கோவையில் சொட்டு மருந்து கொடுத்த சிறிது நேரத்தில் 3 மாத குழந்தை உயிரிழப்பு; போலீசார் விசாரணை

கோவை: கோவை அருகே அங்கன்வாடி மையத்தில் சளிக்கு, ஊசி போட்ட பின், வீட்டிற்கு வந்து சொட்டு மருந்து கொடுத்த சிறிது நேரத்தில் மூச்சுத்திணறல் காரணமாக இறந்ததால், போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.



கோவை: கோவை அருகே அங்கன்வாடி மையத்தில் சளிக்கு, ஊசி போட்ட பின், வீட்டிற்கு வந்து சொட்டு மருந்து கொடுத்த சிறிது நேரத்தில் மூச்சுத்திணறல் காரணமாக இறந்ததால், போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கோவை மசக்காளிப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரசாந்த் மற்றும் விஜயலட்சுமி தம்பதியினருக்கு 3 மாத கிஷாந்த் என்ற ஆண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு, சளி பிடித்திருந்ததால், விஜயலட்சுமி மசக்காளிப்பாளையம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மைத்திற்கு அழைத்து சென்று பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது, அங்கு பணிபுரியும் செவிலியர் ஒருவர் குழந்தைக்கு ஊசி போட்டு சொட்டு மருந்து ஒன்றை சிறிது நேரம் கழித்து தரும்படி கூறி அனுப்பியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, வீட்டிற்கு வந்த சிறிது நேரம் கழித்து குழந்தைக்கு சொட்டு மருந்து அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, 2 மணி நேரம் கழித்து குழந்தை மூச்சுத்திணறலால் அவதிப்பட்டுள்ளான். உடனடியாக, உப்பிலியப்பாளையம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

அங்குள்ள மருத்துவர்கள் குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும்படி கூறி உள்ளனர். அதனைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்ற போது, அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து, குழந்தையின் தாயார் விஜயலட்சுமி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து காவல்துறையினர் குழந்தையின் இறப்பு குறித்து வழக்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...