கோவை: கோவை அருகே அங்கன்வாடி மையத்தில் சளிக்கு, ஊசி போட்ட பின், வீட்டிற்கு வந்து சொட்டு மருந்து கொடுத்த சிறிது நேரத்தில் மூச்சுத்திணறல் காரணமாக இறந்ததால், போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை: கோவை அருகே அங்கன்வாடி மையத்தில் சளிக்கு, ஊசி போட்ட பின், வீட்டிற்கு வந்து சொட்டு மருந்து கொடுத்த சிறிது நேரத்தில் மூச்சுத்திணறல் காரணமாக இறந்ததால், போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை மசக்காளிப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரசாந்த் மற்றும் விஜயலட்சுமி தம்பதியினருக்கு 3 மாத கிஷாந்த் என்ற ஆண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு, சளி பிடித்திருந்ததால், விஜயலட்சுமி மசக்காளிப்பாளையம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மைத்திற்கு அழைத்து சென்று பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது, அங்கு பணிபுரியும் செவிலியர் ஒருவர் குழந்தைக்கு ஊசி போட்டு சொட்டு மருந்து ஒன்றை சிறிது நேரம் கழித்து தரும்படி கூறி அனுப்பியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, வீட்டிற்கு வந்த சிறிது நேரம் கழித்து குழந்தைக்கு சொட்டு மருந்து அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, 2 மணி நேரம் கழித்து குழந்தை மூச்சுத்திணறலால் அவதிப்பட்டுள்ளான். உடனடியாக, உப்பிலியப்பாளையம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
அங்குள்ள மருத்துவர்கள் குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும்படி கூறி உள்ளனர். அதனைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்ற போது, அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து, குழந்தையின் தாயார் விஜயலட்சுமி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து காவல்துறையினர் குழந்தையின் இறப்பு குறித்து வழக்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.