கோவை: வரும் 21-ஆம் தேதி கோவை வெள்ளலூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. 12 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்குமளவுக்கு பிரம்மாண்ட பார்வையாளர் அரங்கு அமைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை வெள்ளலூரை அடுத்த கஞ்சிக்கோணாம்பாளையம் பிரிவிலிருந்து சிறிது தொலைவில் உள்ளது எல் அண்ட் டி பை-பாஸ் சாலை. இங்கு வரும் 21-ந்தேதி ஜல்லிக்கட்டு நடக்கிறது. கோவை மாவட்ட நிர்வாகத்துடன், கோவை ஜல்லிக்கட்டு சங்கம் இணைந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. பணிகளை ஜல்லிக்கட்டு சங்க தலைவர் அன்பரசன் மற்றும் நிர்வாகிகள் பார்வையிட்டனர். தற்போது சுமார் 10 முதல் 12 ஆயிரம் பேர் வரை அமரும் வகையில் காலரிகள் அமைக்கும் பணி ஜரூராக நடந்து வருகிறது. இம்முறை மூன்றடுக்குகளுடன் ரெடிமேடு முறையில் வாடிவாசல் அமைக்கப்படுகிறது.
வி.ஐ.பி. காலரி, போலீசார், மருத்துவக் குழுவினருக்கான அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இம்முறை 400 முதல் 500 காளைகள் மட்டுமே களமிறங்கும் என கூறப்படுகிறது. இதில், 300 காளைகள் மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவையாகும். வழக்கம்போல வீரர்களுக்கு, தங்கக் காசு பரிசாக வழங்கப்படுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக சிறப்பாக நடைபெற்று வருகின்றன.