கோவை: கோவை வடவள்ளி அருகே தனியார் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த 9 -ஆம் வகுப்பு மாணவி திடீரென மயங்கி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை வேடப்பட்டி குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மருதாச்சலம். கால் டாக்ஸி ஓட்டுநரான இவரது மூத்த மகள் பூமா (வயது 14). இவர் வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
வழக்கம்போல் பள்ளி சென்ற மாணவி பூமா, நேற்று மதியம் விளையாட்டு நேரத்தில் பள்ளி வளாகத்தில் இருந்த மைதானத்தில் ஓடி விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அப்போது மாணவி பூமா திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து உடன் விளையாடிக் கொண்டிருந்த சக மாணவிகள் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த ஆசிரியர்கள் மாணவியை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சிறுமியின் உடல் நிலை மிகவும் மோசமானதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இதுதொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்ட விசாரணையில் மாணவிக்கு இதயக் கோளாறு இருந்ததும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு சக தோழிகளுடன் விளையாடிய சிறுமி மயங்கி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.