கோவை: `கோவை மக்களுடன் சந்திப்பு' நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்போது அவர்களிடம் நகர தேவைகள் குறித்து கோரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியின் கோவை பிரிவு சார்பில் `கோவை மக்களுடன் சந்திப்பு' என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கோவை ஜென்னிஸ் ரெசிடென்சியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்ச்சியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் டாக்டர் எல்.முருகன், மாநில துணைத் தலைவர் பேராசிரியர் கனகசபாபதி மற்றும் அறிவுசார் பிரிவு மாநிலச் செயலாளர் எஸ்.ஜகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, ஜெனரல் வி.கே.சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அப்போதுகோவை நகரத்தின் தேவைகள் குறித்து இன்டாக் மற்றும் தி வேராண்டா கிளப் தலைவர் ராமச்சந்திரா, இயக்குனர் ராஜேஷ் கோவிந்தராஜுலு ஆகியோர் மத்திய அமைச்சர்களிடம் எடுத்துரைத்ததுடன் கோரிக்கை கடிதமும் வழங்கினர். இதை கவனத்தில்கொண்ட அமைச்சர்கள் பிரதமர் மோடி அரசின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றத் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.