கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.2 கோடியே 42 லட்சத்தில் புதிய எரிவாயு தகனமேடை: அமைச்சர் வேலுமணி திறந்து வைத்தார்

கோவை: கவுண்டம்பாளையத்தில் ரூ.2 கோடியே 42 லட்சத்தில் புதிய எரிவாயு தகனமேடையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.



கோவை: கவுண்டம்பாளையத்தில் ரூ.2 கோடியே 42 லட்சத்தில் புதிய எரிவாயு தகனமேடையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேற்கு மண்டலத்தில்‌ ஷாஜ்‌ கார்டன்‌ குடியிருப்பு பகுதியில்‌ ரூ.50 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ அமைக்கப்பட்ட புதிய பூங்கா மற்றும்‌ விளையாட்டுத்திடலையும், கவுண்டம்பாளையம்‌ பகுதியில்‌ ரூ.2 கோடியே 42 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ அமைக்கப்பட்ட புதிய எரிவாயு தகன மேடையையும்‌ நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சா்‌ எஸ்‌.பி.வேலுமணி கோவில்பாளையம்‌ குமரன்‌ மகாலில்‌ நடைபெற்ற நிகழ்ச்சியில்‌ திறந்து வைத்தார்‌.



அதைத்‌ தொடர்ந்து, கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ உதவி செயற்பொறியாளாகள்‌ பணியிடத்திற்கு பதவி உயர்வு மூலம்‌ பணி நியமனம்‌ செய்யப்பட்டு அரசு உறுதி‌ செய்யப்பட்டதற்கான ஆணைகளை நான்கு அலுவலா்களுக்கு அமைச்சர் ‌வேலுமணி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கு.ராசாமணி மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌, சட்டமன்ற உறுப்பினர்கள்‌ பி.ஆர்‌.ஜி.அருண்குமார்‌‌, வி.சி.ஆறுக்குட்டி, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.மதுராந்தகி, மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ ராமதுரைமுருகன்‌, மாநகரப்‌ பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, செயற்பொறியாளர்‌ சரவணக்குமார், உதவி ஆணையர்‌ (மேற்கு) சிவசுப்ரமணியன்‌, உதவி பொறியாளர்‌ உத்தமன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலா்கள்‌, பொதுமக்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...