கோவை: கவுண்டம்பாளையத்தில் ரூ.2 கோடியே 42 லட்சத்தில் புதிய எரிவாயு தகனமேடையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
கோவை: கவுண்டம்பாளையத்தில் ரூ.2 கோடியே 42 லட்சத்தில் புதிய எரிவாயு தகனமேடையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் ஷாஜ் கார்டன் குடியிருப்பு பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பூங்கா மற்றும் விளையாட்டுத்திடலையும், கவுண்டம்பாளையம் பகுதியில் ரூ.2 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய எரிவாயு தகன மேடையையும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி கோவில்பாளையம் குமரன் மகாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சியில் உதவி செயற்பொறியாளாகள் பணியிடத்திற்கு பதவி உயர்வு மூலம் பணி நியமனம் செய்யப்பட்டு அரசு உறுதி செய்யப்பட்டதற்கான ஆணைகளை நான்கு அலுவலா்களுக்கு அமைச்சர் வேலுமணி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராசாமணி மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி, மாநகராட்சி துணை ஆணையாளர் ச.மதுராந்தகி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், செயற்பொறியாளர் சரவணக்குமார், உதவி ஆணையர் (மேற்கு) சிவசுப்ரமணியன், உதவி பொறியாளர் உத்தமன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.